நத்தைகள்

Posted on August 23, 2023 by சே சிவக்குமார்
...

அவள் கன்னக்குழி சிலந்தி வலை 
என் பார்வை அதில் சிக்கிக்கொண்டு 
விடுபடமுடியாமல் தவித்தது 


இந்த புத்தர் தனித்துவமானது 
மலர்ந்த பின் கனியும் பூப்போல - என்று அவள் புன்னகைத்தாள் 
அந்த அசைவில் வலையிலிருந்து விடுபட்டது என் பார்வை 
உளம் தளும்பி நானும் புன்னகைத்தேன் 


அவள் விரல்கள் புத்தர் தலைமீதிருக்கும் நத்தைகளை வருடியது 
நத்தைகள் நெளிந்தனால் புத்தருக்கும் கூச்சம் 
அவரும் புன்னகைத்தார்....


அங்கு ஒரு தியானம் நிகழ்ந்தது 
புத்தர் அமைதியானார் 
அவள் நனைந்த புன்னகை உறைந்த முகத்தை திருப்பிக்கொண்டாள் 
நான் நடுங்கும் கைகளில் புத்தரை நழுவவிடாமல் 
திரும்பி நடந்தேன்