மழலை

Posted on May 23, 2022 by சே சிவக்குமார்
...

சற்று முன்பு தான் 


கன்னம் குழைய குழைய முத்தமிட்டு


 குழலைவிட யாழைவிட இனியது உன் மழலை  என 


கொஞ்சினேன் 


அதற்குள் இப்படி  தரையில் புரண்டு  அழுகிறான்  


கொத்து மணல் எடுத்து தலையில் போட்டுக்கொள்கிறான் 


பூங்கா சுற்றிகள் சிலர் நின்று பார்க்கிறார்கள் 


அம்மா கொடுத்த பால் புட்டியை அண்ணன் கொடுத்த பொம்மையை  அவர்கள் மீதே  தூக்கி வீசுகிறான்  


என் மூளையில் கொதி குமிழ்கள் உருவாகி வெடிக்கின்றன 


அவனை  அடி அடி அடக்கு அடக்கு  நசுக்கு நசுக்கு என்று   துடிக்கிறது உள்ளே .


அடக்குவதற்கு கைகள் 


நசுக்குவதற்கு கால்கள் எது முன்னெழுந்தது எனக்கு தெரியவில்லை 


மின்னல் நேர  நிலையிழப்பு 


மீண்டுவந்து சுற்றும் முற்றும் பார்த்தேன்  


என்னை சுற்றி எல்லாம் இயல்பாக தான் இருந்தன


அருகில் கண்ணத்தில் கைவைத்து மனைவி அமர்ந்திருந்தாள் 


என்னாச்சு என்றேன் 


அறிவிருக்க குழந்தையை இப்படியா அடிப்பீங்க என்றாள் 


எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. எங்கே அவன் என்றேன்.


அவன் அப்பவே ஓடிட்டான் என்று  கண்ணத்திலிருந்து கைகளை எடுத்தாள் 


அவள் கண்ணம்  சிவந்துபோய் இருந்தது 


தூரத்தில் பெரியவனும் சின்னவனும் உற்சாகமாக  ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்தனர் 


டேய் ஊஞ்சலை நல்ல புடிச்சிக்க உழுந்தினா என்ன கேக்க கூடாது 


நான் சரி என்றேன்