Contact Us

GET IN TOUCH

ABOUT ME

.

நான் சே சிவக்குமார் சவூதியில் கடந்த பத்தாண்டுகளாக எலக்ட்ரிகல் என்ஜினியராக வேலை பார்க்கிறேன் . பால்யம் எங்கள் கிராமத்தில் கழிந்தது. வேலூர் மாவட்டம் பாலாறு படுகையில் எங்கள் கிராமம் மோட்டுர் உள்ளது. குடியாத்தம் எங்களுக்கு அருகில் இருக்கும் பெரிய நகரம். பொறியியல் பட்டம் VIT ல் முடித்துவிட்டு சிலகாலம் வேலை தேடி அலைந்து ஒருவழியாக வாழ்வு இங்கு வந்து தேங்கிவிட்டது . வாழ்வு ஓரிடத்தில் தேங்கினாலும் அதை உயிர்ப்போடு வைத்திருப்பது தமிழ் நவீன இலக்கியம். எழுத்தாளர் ஜெயமோகன் என் ஆசிரியர். வாழ்வில் அனைத்து தருணங்களிலும் அவர் எழுத்து எழுந்துவருகிறது காக்கிறது. நன்றி.