கைவிடப்படுத்தல்

Posted on April 20, 2022 by சே சிவக்குமார்
...

 


இளையவன் பூங்கா மணலில் விளையாடிக்கொண்டு இருந்தான். நான் மர நிழலில் ஒதுங்கி நின்றேன். சட்டென அவன் எழுந்து என்னை தேடினான். அவன் கண்ணுக்கு நான் புலப்படவில்லை போலும். சுற்றும் பார்த்து விட்டு கைமணலை தட்டியபடி குரல் உடைய ஓங்கி அழுதான். கைவிடப்படுதலின் பெருந்துயர் கனப்பொழுதில் என்னை அழுத்த , ஓடிச்சென்று அவனை அள்ளி வாரி அனைத்துக்கொண்டேன்.